Understand the real history of Tamil Eelam | அறிவோம் ஈழம்: உரிமைப் போராட்டமா, அதிகாரச் சண்டையா?
Manage episode 313386297 series 3268692
"அறிவோம் ஈழம்"
இந்நூற்றாண்டில் முதலில் மெளனிக்கப்பட்டது நம் கண்டு, பயணித்து, வாழ்ந்த தமிழீழ விடுதலைப் போராட்டமாகும்.
உலகில் உரிமைகளை யார், எங்கு பேசினாலும் அவர்கள் கண்மூடி கடந்திட முடியாத வீர வரலாறு. ஈழம் பற்றிய பல்லாயிரக்கணக்கான தரவுகள் நம்மிடம் உண்டு; புதிதாக "அறிவோம் ஈழம்" எதனை பேசுகிறது?
ஈழப் போராட்டத்தின் விமர்சனங்களை தரவுகளுடன், நேர்மையாக எதிர்கொள்கிறது. அதனுடே, ஈழம் போராட்ட வரலாற்றை மில்லியினியம் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்தில் அறிமுகப்படுத்துகிறது.
கட்டாயம் பார்க்கவும்.. உலகம் போற்றும் உரிமைப் போராட்ட வரலாற்றை அறிந்திடவும்...
விளக்கம்: திரு. விஜய் அசோகன் - முனைவர், ஈழ செயற்பாட்டாளர்
வினாக்கள்: திரு. பா.ச. பாலசிங் - எழுத்தாளர் & சமூக செயற்பாட்டாளர்
தொகுப்பு: திரு. க. பொன்சக்தி ஆனந்த் - சமூக செயற்பாட்டாளர்
காணொளியில் உள்ள வினாக்கள்:
1. இலங்கையில் நடந்தது என்ன?
2. விடுதலை புலிகளின் கோரிக்கை எப்படிப்பட்டது?
3. முதலில் ஆயுதம் எடுத்தவர்கள் யார்?
4. விடுதலைப் புலிகளின் மற்ற போராளிகளிடம் இருந்து எப்படி வேறுபடுகிறார்கள்?
5. தமிழரான அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டது ஏன்?
6. விடுதலைப் புலிகளின் கோட்பாடுகள் என்ன?
7. இசுலாமியர்களை தமிழீழத்தை விட்டு வெளியேற்றியது எதற்காக?
8. மலையகத் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்தது ஏன்?
9. விடுதலைப் புலிகள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, உண்மையில் அவர்களின் நிதி ஆதாரம் என்ன?
10. விடுதலைப் புலிகள் தமிழீழத்தை எவ்வாறு கட்டமைத்தனர்?
11. விடுதலைப் புலிகள் சர்வாதிகாரத் தன்மையுடன் நடந்ததாக குற்றச்சாட்டு உள்ளதே?
12. விடுதலைப் புலிகள் அரசியலில் தோற்றுப் போனார்களா?
13. 2001 தாக்குதலுக்கு பிறகும் விடுதலைப் புலிகள் மாறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
14. 2002ல் விடுதலைப் புலிகள் குழந்தைகளை போரில் ஈடுபடுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
15. விடுதலைப் புலிகள் மக்களை மிரட்டி பணிய வைத்தார்களா?
16. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி எப்போது தொடங்குகிறது?
17. மக்களின் வாக்குகளை பெற்றிருந்த போதும் உலக நாடுகள் ஒன்று கூட ஆதரவாக இல்லாதது ஏன்?
18. தற்போது ஈழத்தமிழர்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள்?
19. விடுதலைப் புலிகள் ஆயுதம் எடுத்தது தான் தோல்விக்கு காரணமா?
20. 2009க்கு பிறகு சிங்கள மக்கள் தமிழர்களை சம அளவில் நடத்துகிறார்களா?
21. ராஜீவ் காந்தி கொலையை தங்களின் வெற்றியாக நினைக்கிறார்களா ஈழத்தவர்கள்?
22. ஈழத்தை பொருத்தவரை தமிழ் நாட்டு தமிழர்களின் கடமை என்னவென்று நினைக்கிறீர்கள்?
23. விடுதலைப் புலிகளை போன்று மற்ற இயக்கங்களை ஏன் நீங்கள் ஆதரிப்பது இல்லை?
#Tamil #Eelam #Genocide
6 episoder